திருப்புறம்பயம்
பக்கத்தே தண்ணீரையுடையது என்று பொருள்படும். இதற்கு ஏற்ப திருக்கோயிலின் மேல்புறத்தில் மதிலை ஒட்டி நீர்நிலை இன்றும் இருக்கின்றது. ஒரு காலத்தில் பிரளயம் வந்தபொழுது அது ஊரினுள் புகாதவாறு தடைப்பட்டு புறத்தே நின்றமையால் இப்பெயர்பெற்றது என்பர். அதற்கு ஏற்ப இவ்வூர்த் தல விநாயகர்க்குப் பிரளயங்காத்த விநாயகர் என்ற பெயர் இருக்கின்றது.கும்பகோணத்திற்கு வடமேற்கே 9 கி.மீ. தூரத்தில் மண்ணி யாற்றின் வடகரையில் இருக்கின்றது. கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.இறைவரது திருப்பெயர் புறம்பயநாதர்; சாட்சிநாதர்....